கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய பழைய மாணவர் மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று முன்தினம் தினம் (09) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு அந்நூர் நிறுவனம் (Al – Noor Charity Association) பூரண அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் பாடசாலை அதிபர் அப்துல் காதர் மற்றும் பழைய மாணவர்களான மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட், எல்லளமுள்ள ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலய அதிபர் ரிஸான் அவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலைகளின் ஆசிரியர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிகளை குமாரிமுல்ல முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர் இக்பால் நாஸர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
(கஹட்டோவிட்ட ரிஹ்மி)