A+ A-

மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு









ஆரையம்பதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப கல்லூரியில்(SLIATE) மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு இன்று(11.06.2018) மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் இஸ்லாம் பாடத்திற்குரிய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.அப்துல் கபூர்(மதனி) அவர்கள் விசேட சொற்பொழிவாளராக கலந்து கொண்டு விசேட சொற்பொழிவை ஆற்றினார்.இந்நிகழ்வில் மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப கல்லூரியின் கல்வி இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன்,அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள்,கல்விசாரா  ஊழியர்கள் மற்றும்  அனைத்து பீடங்களினுடைய மாணவர்கள் என பெருமளவிலானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய எம்.ஐ.அப்துல் கபூர்(மதனி) அவர்கள் இந்த மாதிரியான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இன நல்லுறவை மேம்படுத்த பெரும் உந்து சக்தியாக அமையும் எனவும் இவ்வாறான நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக கல்லூரியின் கல்வி இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.


(ஆதிப்  அஹமட்)