சீனாவின் 'சினோமாச் ஹெவி இக்வில் மண்ட்' குழுமத்தினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்
வர்த்தக மற்றும் உல்லாசப்பயண கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையமாக அபிவிருத்தியடைந்து வரும் ஹம்பாந்தோட்டை நகரின் நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பான எதிர்காலத் தேவைகளைக் கருத்திற் கொண்டு 120 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் மற்றும் கழிவு நீர் செயல்திட்டமொன்றை முன்னெடுப்பதில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இக்கருத்திட்டத்தை முன்னெடுத்துவரும் சீனாவின் 'சினோமாச் ஹெலி இக்வில் மண்ட் குழுமத்தினர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வியாழக்கிழமை (14) சந்தித்து இதன் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
இது சம்பந்தமாக இறுதித்தீர்மானத்தை எட்டுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு தாம் எண்ணியுள்ளதாக அமைச்சர் இதன்போது கூறினார்.