A+ A-

காத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்







நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்படவுள்ள  பூங்காக்கள் தொடர்பில் ஆராயும் களப்பயணம் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் அபிவிருத்திகளுக்கு பொறுப்பான மேலதிக செயலாளர்  ஏ.சீ .எம்.நபீல் ,காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் கௌரவ.எஸ்.எச்.எம்.அஸ்பர்,காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை,காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர்களான ஏ.எம்.பௌமி மற்றும் அலி சப்ரி ஆகியோர் கலந்துகொண்ட இக்களப்பயணத்தின் போது  அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்து பார்வையிட்டனர்.

இவ்விஜயத்தின் போது கடற்கரை சுற்று வளைவுக்கு இடப்பக்கமாக(ஏத்துக்கால் கடற்கரை) கடற்கரை பூங்கா அபிவிருத்திகளை ஆரம்பிப்பது எனவும் கட்டம் கட்டமாக அபிவிருத்தி பணிகளை செயற்படுத்தவும்  முடிவுகள் எட்டப்பட்டதோடு இது தொடர்பிலான பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டது.அத்தோடு 2017ம் ஆண்டில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் முயற்சியில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத்தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவையும் கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வது என்ற முடிவும் எட்டப்பட்டது.

(ஆதிப் அஹமட்)