தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா மற்றும் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினரும்,நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் ஆகியோர்களின் வேண்டுகோளின் பேரில் முன்னாள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உற்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் இன்று(26.06.2018) பகிர்ந்தளிக்கப்பட்டன.
மண்முனைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்,காத்தான்குடி நகர சபையின் உறுப்பினரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மகேந்திரலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது பிரதியமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா அவர்களின் அமைச்சினூடான நிதி ஒதுக்கீட்டில் மீனவர்கள் தொழிலுக்கு செல்லும்போது தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையிலான பாதுகாப்பு அங்கிளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
Athif Ahamed