A+ A-

ஆனமடுவ ஒருங்கிணைந்த குடி நீர் வழங்கல் திட்டம் ஆரம்பித்து வைப்பு












ஆனமடுவ ஒருங்கிணைந்த குடி நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் இன்று (2) ஆனமடுவ நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாலய முன்றலில் நடைபெற்றது.
இத்திட்டத்தின் மூலம் புத்தளம் மாவட்டம் - புத்தளம், முந்தளம, மஹகுபுக்கடவல, ஆனமடுவ, நவகத்தேகம மற்றும் குருநாகல் மாவட்டம் - கல்கமுவ, கொடவேஹர ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஸ்பைன் மற்றும் இலங்கை நாட்டின் 8,625 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் 125 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 81,741 பேர் சுத்தமான குடி நீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கேபண்டார, மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.