A+ A-

ACJU இன் கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொடை கிளை (KOU) இன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி








அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொடை கிளை (KOU) இனால் ஏற்பாடு செய்யப்பட்ட "சமகால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்" எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நேற்றைய தினம் (14) கஹட்டோவிட்டவில் அமைந்திருக்கும் கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிறுவனத்தில் நடைபெற்றது. 

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா  (KOU) கிளையின் தலைவர் அஷ் ஷெய்க் அப்துஸ் ஸலாம் (பலாஹி) தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் பிரதான வளவாளராக அஷ் ஷெய்க் முர்ஷித் முழப்பர் (ஹுமைதி) அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்துடன் செயலாளர் அஷ் ஷெய்க் ரம்ஸி அலி (நளீமி) அவர்கள் கிளையின் அறிமுக உரையை நிகழ்த்தியதுடன், உப செயலாளர் அஷ் ஷெய்க் ஸல்மான் உஸாமா (ரிழ்வானி) அவர்களாலும் விளக்கவுரையொன்று நிகழ்த்தப்பட்டது. இறுதியில் கேள்விகளை கேட்பதற்கான நேரமும் ஒதுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளையின் உப தலைவர்களான அஷ் ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் (நளீமி) மற்றும் அஷ் ஷெய்க் முஜீப் (கபூரி) ஆகியோருடன் ஏனைய அங்கத்தவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

​- கஹட்டோவிட்ட ரிஹ்மி -