A+ A-

முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு விசேட ஒன்றுகூடல்








ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடும் நிகழ்வு நேற்று (18) பாராளுமன்ற குழு அறையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சு மற்றும் கட்சி பிரதியமைச்சர்களின் அமைச்சுகள் மூலமாக, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களில் மேற்கொள்ள முடியுமான அபிவிருத்தி திட்டங்களை செய்துகொள்வதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது.

அத்துடன், பிரதமரின் ‘கம்பெரலிய’ வேலைத்திட்டத்தை தங்களது ஊர்களில் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிப்பாதையில் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டன. 

இந்த ஒன்றுகூடலில் புத்தளம், கொழும்பு, கம்பஹா, கண்டி, காலி, மாத்தளை, புத்தளம், குருநாகல், அநுராதபுரம், கேகாலை, மாத்தறை, பொலன்னறுவ, களுத்துறை, நுவரெலிய, ஆகிய மாவட்டங்களில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோன்று, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வட மாகாணங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு இன்று வியாழக்கிழமையும் (19) அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமையும் (20) கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.