இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் B.Sc, MLA அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை நேற்றிரவு (17) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
அவருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைச் செயலாளர், இப்ராஹிம் மக்கி, ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீத் ஆகியோரும் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
அவர்களுக்கு அமைச்சரின் இல்லத்தில் இராப் போசன விருந்தும் வழங்கப்பட்டது.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தில் தலைவர், நவமணி பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் உள்ளிட்ட முஸ்லிம் மீடியா போரத்தின் முக்கியஸ்தர்களும் பிரசன்னமாயிருந்தனர்.