பாதுளை, லுணுகல நீர்வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் நிர்மாணப் பணிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று (21) ஆரம்பித்து வைத்தார்.
163.2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் மடுவத்தை, ரேந்தபொல, ஹொப்டன், சுமுதுகம, அத்தனகொல்ல, லுணுகல நகரம், ஜனதாபுர மற்றும் உடபங்குவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 950 குடும்பங்கள் சுத்தமான குடிநீரையும், சுமார் 200 குடும்பங்கள் சுகாதார வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், அரவிந்த குமார், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதுளை மாவட்ட அமைப்பாளர் பீ. தாஜுதீன், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.