தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா மற்றும் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினரும்,நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் ஆகியோர்களின் வேண்டுகோளின் பேரில் முன்னாள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட 15 விளையாட்டுக்கழகங்களுக்கான உபகரணங்கள் இன்று(29.06.2018) கையளிக்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா அவர்களும் விஷேட அதிதியாக காத்தான்குடி நகர சபையின் உறுப்பினரும்,நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ஜனாபா.சில்மியா,பிரதியமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா அவர்களின் இணைப்புச் செயலாளர் சஹீத் ,பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஜிம்சாத் அலி உற்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(ஆதிப் அஹமட்)