அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சு மின் சக்தியை சேமிப்பதற்கு அதன் பங்களிப்பினை வழங்குகிறது. அதிலொன்றாக "සූර්ය බල සංග්රාමය" வேலைத்திட்டம் நேற்று முன் தினம் (25) குறித்த அமைச்சில், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
22 மில்லியன் ரூபா செலவில் அமைச்சினது கட்டிடத்தில் நிறுவப்படும் சூரிய சக்தி பேனல்ஸ் மூலம் கிலோ வோல்ட் 165 அளவு மின்சாரம் வழங்க முடிவதோடு வருடத்திற்கு 170 டொன் காபன் டயொக்ஸைட் சூழலுடன் சேர்வதைத் தடுக்க முடிகிறது.
அரச நிர்வாக அமைச்சின் மாதாந்த மின் கட்டணமாக சுமார் 15 இலட்சம் வருவதோடு இந்த சூரிய சக்தி வேலைத்திட்டம் மூலம் 4 இலட்சம் ரூபா அளவான நிதியினை அமைச்சுக்கு சேமிக்க முடியுமாகிறது. அத்துடன் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையினை 4 வருடத்திற்குள் மீளப் பெற முடியும் என்று அமைச்சினது உயரதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிகழ்வில் அமைச்சினது செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, மேலதிக செயலாளர் இன்து ரத்னாயக்க, சிரேஷ்ட உதவி செயலாளர் சாந்த வீரசிங்க மற்றும் இலங்கை மின்சார சபை, நிலையான வலு அதிகார சபையின் ஊழியர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
(கஹட்டோவிட்ட ரிஹ்மி)