இலங்கை - தென் கொரியாவுக்கு இடையில் உற்பத்தித்திறன் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தை
ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் மூலம் இலங்கை மற்றும் தென் கொரியாவுக்கு இடையில் உற்பத்தித்திறன் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தை சுற்றொன்று சென்ற மாதம் 25 முதல் 27 வரை தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை சுற்றுக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அமைச்சினதும், உற்பத்தித்திறன் செயலகத்தினதும் ஊழியர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்ததுடன், தென் கொரியாவின் உற்பத்தித்திறன் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- கஹட்டோவிட்ட ரிஹ்மி -