கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், லங்கா அசோக் லேலன்ட் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிபினை லங்கா அசோக் லேலன்ட் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தினர் (நுஜா) சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் நுஜா ஊடக அமைப்பினரால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தன்னாலான சகல உதவிகளையும் ஊடகவியலாளர்களுக்கு செய்வதற்கு ஆயத்தமாகவுள்ளதாக தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் சமூகப்பணியை பாராட்டி நுஜா ஊடக அமைப்பினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இச்சந்திப்பில் நுஜா ஊடக அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ், தவிசாளர் றியாத் ஏ.மஜீத் உள்ளிட்ட ஊடகவியலாளர்களான சுல்பிக்கா ஷரீப், ஏ.எஸ்.எம்.முஜாஹித், எம்.எம்.ஜபீர், எஸ்.எம்.கியாஸ், எம்.றபீக், ஈழமதி ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(றியாத் ஏ. மஜீத்)