கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா சாய்ந்தமருதுக்கு வெள்ளிக்கிழமை (27) விஜயம் செய்தார்.
இதன்போது கடற்கரை வீதியில் அமைந்துள்ள தில்சாத் ஆள்கடல் படகுகள் திருத்தும் தனியார் நிலையத்தினை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது சமூக அபிவிருத்தி அமையத்தின் காரியாலயத்தினையும் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா பார்வையிட்டதுடன் அமைப்பின் தலைவர் யூ.எல்.எம்.பைசர் உள்ளிட்ட வர்த்தக பிரமுகர்களினால் அமைச்சர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இவ்விஜயத்தில் உள்ளுராட்சி, மாகாண சபைகள், விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிறியானி விஜய விக்கிரம, காரைதீவு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
(றியாத் ஏ.மஜீத்)