பென்தொட்டை நீர் விநியோகத்திட்ட நிர்மானப்பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் காணி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலகவின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
850 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுவரும் பென்தொட்டை நீர் விநியோகத்திட்டத்தின் மூலம் மூவாயிரம் முதல் ஐயாயிரம் வரையிலான குழாய் நீர் இணைப்புக்கள் வழங்கப்படவிருப்பதுடன் சுமார் பதினைந்தாயிரம் மக்கள் சுத்தமான குடிநீரைப் பெறவுள்ளனர்.
சுமார் 38 கிலோ மீற்றர்தூரத்திற்கு நீர்விநியோக குழாய்க்கட்டமைப்பைக் கொண்ட இதன் நிர்மானப்பணிகள் பூர்த்தியடையும் நிலையிலுள்ளதால் இன்னும் ஓரிருவாரங்களில் மக்கள் மயமாக்களுக்கு உள்ளாக்கப்பட முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் டீ.ஜீ.எம்.வீ. ஹப்புஆராச்சி, மேலதிகச் செயலாளர் எல்.மங்கலிகா தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், தென்மாகாண சபை உறுப்பினர் அஜீத் சிறி நாணயகார, பிரதேச சபை உறுப்பினர்கள், நீர்பாவணையாளர் சங்க பிரதிநிதிகள், சபையின் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.