A+ A-

பிராந்திய ஊடகவியலாளர்களின் செய்திக் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு நுஜா அமைச்சர் மங்களவிடம் வேண்டுகோள்




அரச ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களின் செய்திக் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு தேசிய ஐக்கியஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜாதலைவர் எஸ்.எம்.அறூஸ் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவிடம்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறந்த ஊடக கலாச்சாரத்தை நாட்டில் உருவாக்கும் நோக்கிலும் ஊடகவியலாளர்களின் பணியினை கௌரவிக்கும் முகமாகவும் ஊடகஅமைச்சு அறிமுகப்படுத்தவுள்ள 'ஜனாதிபதி ஊடக விருது – 2018 யை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாடு நிதிமற்றம் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் நேற்று (06) வெள்ளிக்கிழமை அமைச்சின் கேட்போர் கூட்டத்தில்இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நிதி மற்றும் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்னநிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி  அமைச்சர் லசந்தஅழகியவண்ணநிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளரும்சுயாதீன தொலைக்காட்;சி நிறுவனத்தின் தலைவியுமானஜே.எம்.திலகா ஜெயசுந்தரஊடக அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கே.பீ.ஜெயந்த உள்ளிட்ட அமைச்;சின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊடகநிறுவனங்களின் பிரதானிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஊடக அமைச்சு இலத்தினியல்அச்சு மற்றும் இணையத்தள ஊடகங்களுக்கு 54 வகையான பிரிவுகளில் ஜனாதிபதி ஊடக விருதினைவழங்க உள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர ஊடகங்களுக்கு அறிவிப்புச் செய்தார்இதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களின்கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கும் போதே அமைச்சரிடம் நுஜாவின் தலைவர் இக்கோரிக்கையினை முன்வைத்து உரையாற்றினார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
சிறந்த ஊடக கலாச்சாரத்தை நாட்டில் உருவாக்கும் நோக்கிலும் ஊடகவியலாளர்களின் பணியினை கௌரவிக்கும் முகமாக ஜனாதிபதிஊடக விருதை அறிமுகப்படுத்தியமைக்காக ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு நுஜா ஊடக அமைப்பின் சார்பாக வாழ்த்துக்களைதெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ் ஜனாதிபதி ஊடக விருது தமிழ்சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி மூல ஊடகங்களுக்கு மொழி ரீதியாக விருதுகள்வழங்கப்படுகின்றனவா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்கப்பட்டது.
அரச ஊழியர்களின் பிரச்சினைகளை ஊடகவியலாளர்கள் வெளிக்கொண்டு வருவதன் ஊடாக தீர்வுகள் கிடைக்கின்ற போதுஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்களின் எதிர்பார்ப்புகள் பற்றி பேசுவதற்கும் தீர்வினைப் பெற்றுத்கொடுப்பதற்கும்யாருமில்லாத நிலை இன்று காணப்படுகின்றது.
அரச தொலைக்காட்சி நிறுவனங்களில் கடமையாற்றும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் பிராந்திய ஊடகவியலாளர்களின் செய்திக்கொடுப்பனவுகள் குறைக்கப்பட்ட விடயம் கவலையளிக்கின்றதுஇதில் ஊடக அமைச்சர் நடுநிலைப் போக்கை கொண்டவர் என்ற வகையில்தாங்கள் தலையிட்டு இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த பேசிய நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர,
ஜனாதிபதி ஊடக விருது வௌ;வேறாக  மும்மொழிகளுக்குமாக வழங்கப்படவுள்ளதுஇதன் மூலம் 54 ஜனாதிபதி ஊடக விருதுகள்வழங்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.


மேலும் பிராந்திய ஊடகவியலாளர்களின் செய்திக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்ட விடயமானது அது அந்தந்த நிறுவனங்களின் நிர்வாகம்சார்ந்ததாகும். இருந்த போதிலும் அந்நிறுவனத்தின் தலைவர் இங்குள்ளார். குறித்த விடயத்தை உரியவர்களுடன் கலந்தாலோசித்து உரியதீர்வினை பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு அவருக்கு பணிப்புரை விடுக்கின்றேன் எனவும் அமைச்சர் மங்களசமரவீர இதன்போது தெரிவித்தார்.

(றியாத் மஜீத்)