ஜப்பான் நாட்டின் JAICA நிறுவனத்தினதும் இலங்கை அரசாங்கத்தினதும் 170 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் பேருவளை, தர்காநகர் மற்றும் அளுத்கம பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 72,300 குடும்பங்களின் குடிநீர் தேவையை முற்றாக பூர்த்திசெய்ய முடியும்.
பேருவளை கரையோர நகரத்தை அண்டியுள்ளதால் அங்குள்ள நிலத்தடி நீரில் உவர்தன்மை காணப்படுவதால், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் பிரதேச மக்கள் 100% சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் கெனிசி சுகனுமா, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் ஹப்புஆரச்சி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அஸ்லம், உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.