A+ A-

சாய்ந்தமருது ஜாமிஃ தக்வா ஜூம்ஆப் பள்ளிவாசலின் கீழ் இயங்கி வரும் மக்தபுப் தக்வாவின் ஒரு வருட பூர்த்தி விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் சனிக்கிழமை (11) ஜாமிஃ தக்வா ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.





சாய்ந்தமருது ஜாமிஃ தக்வா ஜூம்ஆப் பள்ளிவாசலின் தலைவர் ஏ.எல். சலீம் தலைமையில இடம்பெற்ற நிகழ்வில் சாய்ந்தமருது ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் அல்-ஆலிம் எம். சலீம் (ஷர்கி) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் ஏறாவூர் மத்ரஸது பாகியதுஸ் ஸாலிஹாத் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.சாதிக் (ஹாஷிமி),மாவடிப்பள்ளி குல்லியத்துல் ஸஃது அறபுக் கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் அல்-ஆலிம் யூ.எல்.எம்.முபாறக் (ஹாஷிமி),மக்தப் தலைமை மேற்பார்வையாளர் அஷ்-ஷெய்க் அல்-ஆலிம் ஏ.வீ. பர்ஹான் (தப்லீகி)மக்தப் மேற்பார்வையாளர் அஷ்-ஷெய்க் என்.எல்.எம்.இர்ஸாத் (தப்லீகி)மக்தப் பொறுப்பாளர்களான எம்.யூ.எம்.நியாஸ்ஏ.எல்.பரீட் ஹாஜியார் உள்ளிட்ட பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மக்தப்பின் முதல் வருடத்தை பூர்த்தி செய்த 66 மாணவர்களுக்கு நினைவுச் சின்னம்சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் விசேட திறமை காட்டிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் விசேட பயானினை ஏறாவூர் மத்ரஸது பாகியதுஸ் ஸாலிஹாத் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.சாதிக் (ஹாஷிமி) நிகழ்த்தினார்.

(றியாத் ஏ. மஜீத்)