A+ A-

பொத்தானை வீதி அபிவிருத்தி தடையை நீக்குவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தை








திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொத்தானை தைக்காவுக்கு செல்லும் வீதியை அபிவிருத்தி செய்வதற்கு வனபரிபாலனத் திணைக்களம் தடை விதித்துள்ளது. மூவின பக்தர்களும் பயணம் செய்கின்ற இந்த வீதியை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மூலம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தொல்பொருளியில் திணைக்களத்தினால் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பொத்தானை ஆராய்ச்சி மரைக்கார் தைக்கா அமைந்துள்ள பிரதேசத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேசி மீட்டுக்கொடுத்திருந்தார். இந்நிலைல் தற்போது பொத்தானை கிராமத்தில் வீதியை அமைப்பதற்கு தடையுத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் நலன்கருதி வனபரிபாலனத் திணைக்களத்தின் தடையை நீக்கி, பொத்தானை வீதியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (10) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பண்டாரவுடன் கலந்துரையாடினார். தடைகளை உடனடியாக நீக்கிவிட்டு, குறித்த வீதியை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம். நபீல், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஐ.எல்.எம். மாஹிர் மற்றும் உயர்பீட உறுப்பினர் பழீல் பீ.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.