A+ A-

சம்மாந்துறை அபிவிருத்திகள் சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம்





சம்மாந்துறை அபிவிருத்திகள் சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (10) பிரதேச சபையில் நடைபெற்றது. 

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் சம்மாந்துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களில் முடிவுறாத நிலையிலுள்ள வீதிகள் மற்றும் சிறுவர் பூங்காக்களின் வேலைகளை துரிதப்படுத்தி, அவற்றை அவசரமாக செய்துமுடிக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இக்கூட்டத்தில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர், பிரதேச சபை தவிசாளர் நௌசாத், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம். நபீல், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம் மற்றும் ஐ.எல்.எம். மாஹிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.