A+ A-

சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக அங்கத்தவர்களுக்கு இலவச இளைஞர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு






சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக அங்கத்தவர்களுக்கு இலவச இளைஞர் அடையாளஅட்டை வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது.
கல்முனை தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும்எதிர்க்கட்சி பிரதி அமைப்பாளருமான பைசர் தில்சாட் அஹமட்டின்தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி .லத்தீப்சாய்ந்தமருதுபிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.வை.எம்ஹாரூன் மற்றும் முன்னாள் சம்மேளன தலைவர் எம்.சீ.எம்முனா,சாய்ந்தமருது பிரதேச சம்மேளனத் தலைவர் எம்.வை.எம்றகீப்செயலாளர் மற்றும் அஸ்ரா போரத்தின் தலைவர் ஆத்திப் ஆரிபீன்,சம்மேளனத்தின் பொருளாளரும் செரண்டிப் இளைஞர் கழகத்தின் தலைவருமான எம்.எஸ்.எம்இம்தியாஸ் மதனிசம்மேளனத்தின்அமைப்பாளரும் மிஸ்ரோ அமைப்பின் தலைவருமான இக்தார் இஸ்மாயில் மற்றும் ஊடக செயலாளர் ஷஸ்பாக் அகமட் உள்ளிட்டபிரதேச இளைஞர் கழகங்களின் உறுப்;பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது இளைஞர் சேவை மன்றத்தின் அவசியம் தொடர்பாக இளைஞர்;கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன்இளைஞர்களுக்கான இலவச அடையாள அட்டைக்கான விண்ணப்படிவமும் வழங்;கி வைக்கப்பட்டது.
இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்சவால்கள்மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இந்நிகழ்வுக்கு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி   முபாரக் அலிசெரண்டிப் இளைஞர் கழகம்புலூமிங் ஸ்ரீலங்கா இளைஞர் கழகம்,அஸ்ரா போரம்.எப்.எம்போட்டோ கிராபி ஆகியோர் அனுசரனை வழங்கினர்.

(றியாத் ஏ. மஜீத்)