அரசாங்க நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களது பிறந்த தின நிகழ்வு சென்ற 25 ஆம் திகதி மொனராகலையில் உள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்றது. அதில் இரத்த தான நிகழ்வொன்று இடம்பெற்றதுடன் பிரதேச இளைஞர், யுவதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சிங்கப்பூரினால் வழங்கப்பட்ட ரூபா 80 இலட்சம் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
மொனராகலை மற்றும் பிபிலை வைத்தியசாலைகளுக்கு முக்கிய தேவையாக இருந்த கட்டில்கள் வழங்கப்பட்டதுடன் விசேட திறமையுடையவர்களுக்கான சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டன.
(கஹட்டோவிட்ட ரிஹ்மி)