கிண்ணியாவில் பெருந்தலைவர் மர்ஹூம் எம். எச். எம். அஸ்ரப் அவர்களின் 18வது நினைவேந்தல் நிகழ்வு
மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் 18ஆவது நினைவு தின பிரதான வைபவம் கிண்ணியா மாவட்டக் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையின் கீழ் மாவட்டக் காரியாலயத்தின் பிரதான கேற்போர் கூடத்தில் அரபுக்கல்லூரியின் உலமாக்கள் மற்றும் மாணவர்களின் குர்ஆண் தமாமுடன் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிண்ணியா நகரசபையின் பிரதித் தவிசாளர் ஐயூப் நலிம் மற்றும் நகரசபை உறுப்பினர்களான நிவாஸ் முஸ்தபா, கலிபதுல்லா, முன்னாள் நகரசபையின் பிரதித் தவிசாளர் சட்டத்தரனி முஜீப் அவர்களும் பிரதேசசபை உறுப்பினர்களான என்னுடைய பிரத்தியேக செயலாளர் சனூஸ், நசீர் அவர்களும் மூதூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஹரீஸ் குச்சவெளிப் பிரதேச சபை உறுப்பினர் மீஷான், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஆசீக், பளீல் அமீன் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.