இறக்கக்கண்டியில் மறைந்த பெருந் தலைவர் மரஹூம் எம். எச்.எம்.அஸ்ரப் அவர்களின் 18வது நினைவு தின நிகவுகள்
இறக்கக்கண்டியில் மறைந்த பெருந் தலைவர் மர்ஹூம் எம். எச்.எம்.அஸ்ரப் அவர்களின் 18வது நினைவு தின நிகவுகள் ஞாயிற்றுக்கிழமை (16) அரசியல் உயர்பீட உறுப்பினர் அன்சார் ஹாஜியார் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களினால் இறக்கக்கண்டி, இக்பால் நகர் போன்ற பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது.
மறைந்த தலைவரின் சுவன வாழ்வு சிறக்க அரபுக்கல்லூரி மாணவர்களினால் துவாப் பிரார்த்தனைகளும் அதனோடு இணைந்ததாக பலில் மாமா வீதியை கொங்ரீட்டு வீதியாக மாற்றும் வேலைத்திட்டம், வாலையூற்று பாலர் பாடசாலைக்கு சுற்று மதில் அமைக்கும் வேலைத்திட்டம், மற்றும் இக்பால் நகர் மீனவர்களுக்கான தற்காலிக அலுவலகம் அமைக்கும் வேலைத் திட்டம் போன்ற நிகழ்வுகள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வின்போது குச்சவெளிப் பிரதேச சபைத் தவிசாளர் முபாரக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி லாஹீர், பிரதேச சபை உறுப்பினர்களான நஸார், பரீஸ், மீசான், நகர சபை உறுப்பினர் மஹ்சூம் ஆசிரியர், மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.