ஓகொடபொல யூத் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி 23, 24 ஆகிய தினங்களில் கஹட்டோவிட்ட பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
நேற்றைய தினம் (24) நடைபெற்ற இறுதிப்போட்டியில் கஹட்டோவிட்ட JF A மற்றும் ஓகொடபொல யூத் B அணிகள் மோதின. ஓவருக்கு 4 பந்துகள் வீதம் 4 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யூத் A அணியினர் 3 விக்கெட்களை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு ஆடிய JF A அணியினர் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து 3 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி இலக்கை தாண்டியது. போட்டிக்கு பிரதான அனுசரணையாளராக அத்தனகல்ல பிரதேச சபை வேட்பாளர் பவாஸ் அவர்கள் திகழ்ந்ததுடன், கிண்ணங்களை வழங்கி வைக்கும் நிகழ்விலும் கலந்து சிறப்பித்தார்.
(கஹட்டோவிட்ட ரிஹ்மி)