கொங்றீட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட கண்டி, குண்டசாலை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளிக்குழி வீதியை (ரொக் ஹில் கார்டின்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (6) பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.
அத்துடன், மடவளை மதீனா தேசிய பாடசாலை மைதானத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகளை அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆரம்பித்துவைத்தார். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம் இரண்டாம் கட்டமாக மைதானத்துக்கு நிலக்கீழ் குழாய் பதித்து, புற்கள் நாட்டி அழகுபடுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வுகளில் பிரதேச சபை உறுப்பினர்களான ரியாஜ், அம்ஜாட் முத்தலிப், நெளபர், கட்சியின் மடவளை அமைப்பாளர் ரிஷாட், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.