A+ A-

மக்களை ஒன்றிணைப்பதில் பிரதி அமைச்சர் ஹரீஸின் தலைமைத்துவத்தை நான் மெச்சுகின்றேன், 'ஸ்போர்ஸ்ட் பெஸ்ட் பவுண்டேசன்' இளைஞர்களின் எதிர்காலம் - அமைச்சர் பைசர் முஸ்தபா புகழாரம்









சிலர் அரசியலுக்குள் அதிகாரங்களுக்ககவும்  தனிப்பட்ட நலன்களை அடைந்து கொள்வதற்காகவும் நுழைகிறார்கள்ஆனால் பிரதிஅமைச்சர் ஹரீஸ் மக்களோடு இருந்து மக்களுக்காக வேலை செய்பவர் குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலத்திற்காகசெயற்படுகின்றவர் என உள்ளுராட்சிமாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதியமைச்சரும்   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமானசட்டத்தரணி எச்.எம்.எம்ஹரீஸின் எண்ணக்கருவில் கிராம மட்டத்தில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் நோக்கைஅடிப்படையாகக் கொண்டு 'ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பவுண்டேசன்எனும் அமைப்பினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வுநேற்று (13) வியாழக்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.
பிரதி அமைச்சர் எச்.எம்.எம்ஹரீஸின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் மற்றும்விளையாட்டுத்துறை அமைச்சர்   ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதேமேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானாபாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம்அடைக்கலநாதன்இலங்கைக்கான குவைத் நாட்டு தூதுவர் கலாப் பூ துஹைர்அவுஸ்திரேலியாவின் கஸ்சல்லோ குறூப்நிறுவனத்தின் பணிப்பாளர் கஸ்சல்லோ மார்சல்லோதென் கொரியாவின் என்.வீ.ஜி குறூப் நிறுவனத்தின் பணிப்பாளர் லிம் டொங்பியோமற்றும்   வெளிநாட்டு தூதுவர்கள்உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள்விளையாட்டுத்துறை விற்பன்னர்கள்,விளையாட்டுத்துறை ஆர்வலர்கள்தொழிலதிபர்கள்ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்,
பிரதி அமைச்சர் ஹரீஸ் ஒரு அரசியல்வாதி அதற்கும் அப்பால் அவர் ஓரு சட்டத்தரணி அனைத்துக்கும் மேலாக அவர் ஒரு மனிதநேயமிக்கவர்.  அவருடன் இணைந்து செயற்படுவதில் நான் பெருமையடைகின்றேன்அவருக்கு எதிர்காலம் பற்றிய சிறந்த தூரநோக்குசிந்தனை உள்ளதுநாங்கள் சகோதரர்களாக சிந்தித்து செயற்படவேண்டும்.
சிலர் தனது சமூகம் பற்றி சிந்திக்கிறார்கள்  சிலர் பிரதேச ரீதியாக சிந்திக்கிறார்கள்நாங்கள் தேசியம் என்ற வகையில் முன்னேறிச்செல்ல வேண்டும்நான் நினைக்கின்றேன் ஹரீஸினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'ஸ்போர்ஸ்ட் பெஸ்ட் பவுண்டேசன்அமைப்புதெளிவான இலக்குகளின் ஊடாக சரியான பொறிமுறைகளைக் கையாண்டு ஒரே இலங்கை என்ற இலக்கை அடைய முடியும்.
கடந்த 30 வருட யுத்தத்தினால் கிழக்கு மாகாணம் பின்னடைந்திருந்ததுயுத்தத்தினால் மக்களின் உடமைகளும் வாழ்வாதாரங்களும்அழிக்கப்பட்டு சகோதரத்துவம் சிதைந்திருந்ததுசகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்கும்மக்களை ஒன்றிணைப்பதற்குமான ஒருஊடகமாக விளையாட்டு அமைகிறதுமக்களை ஒன்றிணைப்பதில் பிரதி அமைச்சர் ஹரீஸின் தலைமைத்துவத்தை நான்மெச்சுகின்றேன்.
இன்று கிழக்கு மாகாண அரசியல் பிளவுபட்டிருக்கிறதுஇதனை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ்செயற்பட்டு வருகின்றார்அவர் சமூகத்தைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் சிந்தித்து செயற்படுகின்றவர்அவருடைய தூர நோக்குபாதையையும் அவர் முன்னோக்கி செல்கின்ற பாதையையும் நான் பாராட்டுகிறேன்.
விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் இந்த அமைப்பு சரியான நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதுஇதனையிட்டு பிரதிஅமைச்சர் ஹரீஸூக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
விளையாட்டு மக்களை ஒன்றினைக்கும் துறையாகும்நான் மிகவும் அதிஸ்டத்துக்குரியவன் நான் விளையாட்டுத்துறை அமைச்சராகஇருக்கையில் எமது தேசிய அணிகள் நல்ல முறையில் பிரகாசிக்கின்ற நேரத்தில்விசேடமாக கிரிக்கெட் அணியின் வெற்றியினால்மக்கள் எங்களை பாராட்டுவார்கள் ஆனால் நாங்கள் சந்தோசமடைய முடியாதுஅப்பாராட்டுக்குரியவர்கள் நாங்கள் அல்ல.
வலைப்பந்தாட்டம்கரம்கிறிக்கெட் போன்றவற்றில் வெற்றி பெற்றுள்ளோம்அதற்கு புகழ் அமைச்சருக்கு வருகிறதுஆனால் அந்தபுகழுக்குரிய உரிமை எமக்கில்லைஏனென்றால் வீரர்களினதும் சம்மேளனங்களினதும் கடின உழைப்பினால் பெற்ற வெற்றியாகும்.
ஹரீஸ் திறமையான அரசியல்வாதி விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக இருந்து விளையாட்டுத்துறைக்கு நிறையவேசெய்திருக்கின்றார்அதன் தொடர்ச்சிதான் என்னுடைய விளையாட்டுத்துறை அமைச்சுநான் உங்களுக்கு உதவி செய்ய இருக்கிறேன்.
நாம் இலங்கையர்கள் என்று சிந்திக்க வேண்டும் சிறுபான்மை பெரும்பான்மை என்ற எண்ணத்தை தவிர்த்து நாம் ஒன்றென்று நினைத்துஒரு கிரிக்கெட் அணி போன்று செயற்பட வேண்டும்.  அரசியல்வாதிகள் தான் இனமதமொழி ரீதியான பிரிவினைகளைவிதைக்கிறார்கள்மக்களின் வாக்குகளை இலக்குவைத்து இப்படிச் செய்கிறார்கள்.
பிரதி அமைச்சர் ஹரீஸ் இளமையான துடிப்புள்ள திறமையான தலைவர்கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை ஊடாகமக்களுடைய வாழ்வியலில் சிறந்த மாற்றத்தை கொண்டுவர முடியும் என நம்புகிறேன்அமைச்சர் என்ற வகையில்வடக்கு கிழக்குஅணிகளை தெற்கு பிரதேச அணிகளுடன் இணைத்து விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி சகோதரத்துவத்தையும் நட்பையும் வளர்க்கவேண்டும் என்ற எண்ணமுள்ளது.
பல நாடுகளில் குழுக்களுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்தற்கு விளையாட்டு உறுதுணையாக இருக்கிறதுஅதனடிப்படையில்தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு 'ஸ்போர்ஸ்ட் பெஸ்ட் பவுண்டேசன்பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.       

(றியாத் மஜீத்அகமட் எஸ்.முகைதீன்)