குறிஞ்சானிக்கான தனியான பிரதேச செயலகம் ஸ்தாபித்தல் சம்மந்தமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
குறிஞ்சாக்கேணிக்கான தனியான பிரதேச செயலகம் ஸ்தாபிக்க வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் விடுத்த வேண்டுகோளையடுத்து ஞாயிற்றுக்கிழமை (23) காலை உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு. கொடிகார கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்து பிரதேச செயலாளருடன் கலந்துரையாடினார்.
தனியான பிரதேச செயலகம்
ஸ்தாபித்தற்கான தேவையான தகவல்கள் அனைத்தையும் பெற்று வருகின்ற பிரதேச அபிவிருத்தி குழுவின் அனுமதியையும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதியையும் கோரியுள்ளார்.
இரண்டு அபிவிருத்தி குழுக்களும் அனுமதியை வழங்கிய பின்னர் உரிய நடவடிக்கைகளை மிக விரைவாக எடுக்கவுள்ளாதாக
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மேலும் கூறினார்.