நீர்நிலைகள் ஊடாக ஏற்படக்கூடிய வியாதிகள், பாதிப்புகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கான தெற்காசியாவில் மிகப்பெரிய ஆய்வுகூடம் பேராதனை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது இலங்கை மக்களுக்கு நன்கொடையாக 3380 மில்லியன் ரூபாவை இதற்கு நிதியுதவி வழங்குவதற்கு சீன அரசாங்கம் முன்வந்துள்ளது.
50 ஆயிரம் சதுரஅடி விஸ்தீரனத்தில் அமையப்பெறவுள்ள இந்த ஆய்வுகூடத்தில் நீரை துல்லியமான முறையில் ஆய்வுசெய்யக்கூடிய பல உபகரணங்கள் நிறுவப்படவுள்ளன. இந்த ஆய்வுகூடத்தின் நிர்மாணிப் பணிகள் வெள்ளிக்கிழமை (28) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.