A+ A-

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டத்திற்கு எம்.எஸ்.தௌபீகினால் அடிக்கல் நாட்டி வைப்பு










எனது வேண்டுகோளுக்கிணங்க கௌரவ அமைச்சர் சஜித் பிரமதாச அவர்களின் உத்தரவின்பேரில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 30 வீட்டுத் திட்டம் கிண்ணியா நடுஊற்று கிராமத்தில் அமைப்பதற்காக  (11. 09. 2018) பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகினால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் நிகார், கிண்ணியா நகர சபையின் பிரதித் தவிசாளர் நளீம், கிண்ணியா நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிண்ணியா பிரதேச செயலாளர் அனஸ், வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் றியாத் மற்றும் பயானாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.