A+ A-

பெண்கள் அரபுக் கல்லூரிக்கான சுற்று மதில் வேலை ஆரம்பித்தலும் தாயிப் நகர் பிரதேசத்திற்கான நீர்க் குழாய்கள் பதித்தலும்






தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் இமாம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் பாத்திமத்து சஹ்தியா பெண்கள் அரபுக் கல்லூரிக்கான சுற்று மதில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து ஞாயிற்றுக்கிழமை (23) அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

அதேவேளை  தாயிப் நகரின் நீண்டகாலத் தேவையாக இருந்து வந்த குடிநீர்ப் பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு நீர்க் குழாய்களை வழங்கி வைத்து அக்குழாய்களை பதிப்பதற்கான நடவடிக்கையும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகினால் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வைபவத்தில் பிரதேச சபை உறுப்பினர்களான இமாம், றஹீம், பரீதா. தம்பலகாம பிரதேச மத்திய குழுத் தலைவர் ஆசுதீன் ஆசிரியர், செயலாளர் சபீயுள்ளா மற்றும் பொதுமக்களும்  கலந்துகொண்டனர்.