A+ A-

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு







புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் டாக்டர் ஷில்பக் என். அம்புலே புதன்கிழமை (05) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இராஜதந்திர சேவையில் இணைந்துள்ள இவர் மருத்துவருமாவார். இதுவரை இங்கு பிரதி உயர் ஸ்தானிகராக கடமையாற்றிய அரின்டம் பக்ஷி அவரை அமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்தார். மூவரும் சமகால அரசியல் களநிலவரம் பற்றியும் இலங்கை – இந்திய உறவு  பற்றியும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.