A+ A-

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இலஞ்சம், ஊழல் செயற்பாடின்றி மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர் - சமுர்த்திதலைப்பீட முகாமையாளர் சாலிஹ்





சாய்ந்தமருதுகல்முனை பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இலஞ்சம்ஊழல் செயற்பாடுகளின்றிமக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதையிட்டு பெருமிதமடைகின்றேன் என சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்திதலைப்பீட முகாமையாளர் .ஆர்..சாலிஹ்  தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து மாற்றலாகி சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் சமுர்த்தி தலைப்பீட முகாமையாளராககடமையேற்றுள்ள .ஆர்.எம்.சாலிஹ் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்;த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பிரதேசசெயலக வாராந்த மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் .எம்.றிகாஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் சமுர்த்தி முகாமையாளர் .கபூர்சமுர்த்திஉதவி முகாமையாளர் .எம்.எம்.றியாத்சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சஹாப்தீன்சமுர்த்தி சமூகப் பாதுகாப்புஉத்தியோகத்தர் எம்.எம்.றசீட்முகாமைத்துவ உதவியாளர் எம்.றஜினா உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்,
கல்முனைப் பிராந்தியத்தில் சமுர்த்தி திட்டத்திற்கு சிறந்ததொரு அத்திவாரத்தினை முன்னாள் கல்முனை பிரதேச செயலாளர்மர்ஹூம் .எல்.எம்.பளீல் இட்டு வைத்துள்ளார்மர்ஹூம் .எல்.எம்.பளீல் தொடக்கம் சாய்ந்தமருதுகல்முனை பிரதேச செயலகங்களில் கடமையாற்றி  பிரதேச செயலாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய சிறந்த வழிகாட்டல்,அறிவுரை என்பவற்றினால் இன்று சிறந்த உத்தியோகத்தர்களையும்  சாய்ந்தமருதுகல்முனை பிரதேசத்தில் சிறந்த சமுர்த்திதிட்டத்தையும் காணக்கூடியதாக உள்ளது.
இதனால் அம்பாறை மாவட்ட அரசாங்க  அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மட்டத்தில் நற்பெயரினை சாய்ந்தமருதுகல்முனை பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெற்றுள்ளனர்இதனையிட்டுமகிழ்ச்சியடைகின்றேன்.
சமுர்த்தி திட்டத்தினை சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்துவதற்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிகையாகாதுஇலஞ்சம்ஊழல் செயற்பாடுகளின்றி எதுவித எதிர்பார்ப்புமின்றி மக்களுக்கான கடந்த22 வருடங்களாக சேவையாற்றி வருகின்றீர்கள்இதனால்  நீங்களெல்லாம் அனுபவமிக்க உத்தியோகத்தர்களான இன்றுமாறியுள்ளீர்கள்.
இன்று நல்லாட்சி அரசாங்கத்தினால்  புதிதாக  வழங்கப்படவுள்ள சமுர்த்தி  நிவாரணத்திற்கு சாய்ந்தமருதிலிருந்து 1463 புதியவிண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளனஇதிலிருந்து தகுதியான புதிய பயனுகரிகளின் பெயர்ப்பட்டியலை தரவரிசைப்படிதயாரிக்குமாறு பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இதன்போது கேட்டுக்கொண்டார்.

(றியாத் மஜீத்)