பல வருடங்களுக்கு முன்னர் கம்பஹா மாவட்டத்தில், அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள கஹட்டோவிட்ட கிராமத்தில் Al Aqsa மற்றும் Al Amana ஆகிய நிறுவனங்களால் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் உத்தரவின் பேரில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான மதிப்பீடு ரூபா 2 300 000 ஆகும்.
சென்ற வாரம் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் கடவத்தையிலுள்ள பிராந்திய காரியாலத்தில் இருந்து வந்த ஊழியர்கள் மதிப்பீடு மேற்கொண்டதுடன், நேற்றைய தினம் (05) மீண்டும் வருகை தந்த ஊழியர்களால் ஆழ் கிணறு (Deep Well) தோண்டுவதற்கான இடம் இனங்காணப்பட்டு அதற்கான அளவீடு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(கஹட்டோவிட்ட ரிஹ்மி)