A+ A-

மூதூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற "பெருந்தலைவர் நினைவு தினம்






ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் மறைந்து பதினெட்டாவது ஆண்டு நிறைவையொட்டி மூதூர் பிரதேசச சபை கேட்போர் கூடத்தில் பெருந்தலைவர் நினைவு தின நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்றது.
மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.என்.எம்.அரூஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளரும், நகர திட்டமிடல் நீர் வழங்கள் அமைச்சின்  இணைப்புச்செயலாளரும்,காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி.ஜே.எம்.லாஹீர் உற்பட மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள்,கட்சிப்போராளிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களைப்பற்றிய பிரதான உரையினை யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் இந்நிகழ்வில் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.