A+ A-

மன்னார் மாவட்டத்தை கடந்து வாழ்வாதார பொருட்கள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் S.M.A.நியாஸ் அவர்களினால் வழங்கி வைப்பு



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினரும் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான S.M.A.நியாஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட வாழ்வாதார பொருட்கள் சுமார்- 25.. பயனாளிகளுக்கு 05/09/2018 அன்று வடமாகாண சபை உறுப்பினர் S.M.A.நியாஸ் அவர்களினால் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச பிரதேச சபைக்கட்டிடத்தில் வைத்து வழங்கிவைக்கபட்டது.
சாளம்பை குளம் ,அரபா நகர்,செல்வ நகர்,ஹிஜ்ராபுரம்,புளிதறித்த புளியங்குளம், இராசேந்திரகுளம், சோபாலபுளியங்குளம் கிராமத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு வாழ்வாதார பொருட்களான தண்ணீர் கொள்கலன்கள் , சீமெந்து பைகட்டுகள், வீதி மின்விள க்குகள் போன்றவை வடமாகாண சபை உறுப்பினர் S.M.A.நியாஸ் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது ,
இந்நிகழ்வில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச பிரதேச சபை செயலாளர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முசலி பிரதேச சபை உறுப்பினர் தாஜுதீன் ,வெங்கல செட்டிக்குள முன்னால் பிரதேச சபை உறுப்பினர் சாஜிதீன் மற்றும் ,வெங்கல செட்டிக்குள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை வேட்பாளர்கள் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள்,போன்றோரும் கலந்து சிறபித்தனர் .