பொது நிர்வாக முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சினால் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 900 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற திறந்த போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைவாக இந்நியமனம் வழங்கப்படவுள்ளது.
இதற்கு முன்னர் 2018 மே மாதம் முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 4500 பேர் தெரிவு செய்யப்பட்டதுடன், அவர்களுள் நியமனத்தைப் பெற்று சேவைக்கு சமூகமளிக்காதவர்களின் வெற்றிடத்திற்கே இந்நியமனம் வழங்கப்படவுள்ளது. இந்நியமனம் எதிர்வரும் 18 ஆம் திகதி பொது நிர்வாக, முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களின் அழைப்பின் பேரில் கௌரவ பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு நியமனங்கள் வழங்கப்படுபவர்கள் வெற்றிடங்களுக்கு ஏற்ப அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் இதர அரச நிறுவனங்களில் சேவைக்கு அமர்த்தப்படவுள்ளனர்.
(கஹட்டோவிட்ட ரிஹ்மி)