A+ A-

இமாம் ஷாபி நிறுவனத்தின் ஹிப்ழ் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான வருடாந்த சுற்றுலா - 2018









கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிறுவனத்தில் இயங்கி வரும் முஸ்அப் பின் உமைர், ஹப்ஸா பின்த் உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய அல் குர்ஆன் ஹிப்ழ் வகுப்புக்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் மாணவ, மாணவிகளுக்கான வருடாந்த சுற்றுலாப் பயணம் சென்ற 6 மற்றும் 7 ஆம் திகதி நிகழ்ந்தது.

மாணவர்கள் முதற் கட்டமாக பொலன்னறுவையில் உள்ள நூதனசாலைக்குச் அழைத்துச் செல்லப்பட்டதுடன் பொலன்னறுவை மற்றும் நூதனசாலை சம்பந்தமான பல தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

அங்கு முஸ்லிம் சுகாதார அதிகாரி ஒருவருடனான சந்திப்பு நிகழ்ந்தது. அவர் மாணவர்களுடனும் பெற்றோர்களுடனும் சுகாதாரம் சம்பந்தமாகவும், ஆரோக்கியம் சம்பந்தமாகவும் பல விடயங்களைப் பரிமாறிக்கொண்டார்.

பின்னர் மட்டக்களப்பு மாவட்டம் நோக்கிப் பயணிக்கையில் மாவட்ட எல்லையில் இருக்கும் ரிதிதன்ன பிரதேசத்திற்குச் சென்றனர். அங்கு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களது முயற்சியால் கட்டப்பட்டு முடியும் தருவாயில் இருக்கும் மட்டக்களப்பு பல்கலைக் கழகக் கல்லூரிக்குச் சென்றனர்.

அங்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் இருந்தார்கள். அவருடன் எல்லோரும் சந்திப்பை மேற்கொண்டதுடன், பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தை அனைவரும் பார்வையிட்டார்கள். பின்னர் பாசிக்குடாவுக்கு சென்றதுடன், இரவில் காத்தான்குடியில் தங்கினார்கள். மறுநாள் காலையில் காத்தான்குடியில் இருக்கின்ற "Center for Islamic Guidance" இனை பார்வையிட்டனர்.

அங்குள்ள Islamic Module School, குர்ஆன் மனனப் பிரிவு, பெண்களுக்கான மேலதிக வகுப்புப் பிரிவுகள் மற்றும் அங்கே இருக்கும் காத்தான்குடியிலே மிகப் பெரிய முழுமையான நூலகம் என்பவற்றை மாணவர்கள் பார்வையிட்டதுடன், சந்திப்புக்களை மேற்கொண்டு கருத்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

பின்னர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியில் உருவான இஸ்லாமிய நூதனசாலையைப் பார்வையிட்டு, ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரிக்குச் சென்றார்கள். அதன் அதிபர் அலியார் ஹஸரத் அவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டு அவர்களிடமிருந்து துஆக்களையும் வழிகாட்டல்களையும் பெறும் சந்தர்ப்பம் மாணவர்களுக்குக் கிடைத்தது. பிறகு காத்தான்குடியில் அவர்கள் தங்கியிருந்த "தாருல் அர்கம்" எனப்படும் அந்த இடத்திற்குச் சென்று அங்கு ஒரு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் கேள்விகளுக்கு பதில் சொன்ன மாணவர்களுக்கான பணப்பரிசில்களும் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இந்த சுற்றுலா நிகழ்வில் மொத்தமாக 65 பேர் அளவில் கலந்து கொண்டதுடன், அவர்களில் 44 பேர் மாணவர்களும் ஏனையவர்கள் இமாம் ஷாபி நிறுவனத்தின் அலுவலர்களும் பெற்றோர்களுமாவர். இந்நிகழ்வு பங்குபற்றிய சகலருக்கும் மிகவும் சிறப்பாகவும், பயன்மிக்க அனுபவமாகவும் அமைந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தகவல் :
ஷெய்க் முஜீப் (கபூரி),
தலைவர்,
கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையம்,
கஹட்டோவிட்ட