ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஸஹிரியன் 90 உயர்தர மாணவர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கற்பித்த ஆசிரியர்களுக்கான மருத்துவபரிசோதனை முகாம் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு என்பன இன்று (07) ஞாயிற்றுக்கிழமை கல்முனை ஸாஹிரா கல்லூரி காரியப்பர்மண்டபத்தில் இடம்பெற்றது.
ஸஹிரியன் 90 உயர்தர மாணவர்கள் அமைப்பின் செயலாளர் தபாலதிபர் யூ.எல்.எம்.பைசரின் நெறிப்படுத்தலில் தலைவர் வைத்தியர்எம்.எம்.ஏ.றிசாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், ஸாஹிராக் கல்லூரியின்அதிபர் எஸ்.முஹம்மட், ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபர்களான சட்டத்தரணி எம்.சீ.ஆதம்பாவா, ஏ.எம்.ஹூசைன்உள்ளிட்ட ஸஹிரியன் 90 உயர்தர மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கற்பித்த ஆசான்களின் உடல் நலத்தை பேணுமுகமாக மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றதுடன் கண்பரிசோதனையும் இடம்பெற்றது.
நிகழ்வின் இரண்டாம் கட்டமாக கற்ற மாணவர்களால் கற்பித்த ஆசான்களுக்கு பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இவர்களுக்கு கற்பித்த தற்போது மரணித்துள்ள ஆசான்களுக்கு துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
(றியாத் ஏ. மஜீத்)