களுத்துறை மாவட்டத்தில் உவர்நீர் கலப்புக்கு தீர்வாக அளுத்கம - மத்துகம - அகலவத்த ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டத்தின் பூர்வாங்க வேலைகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று (22) ஆரம்பித்து வைத்தார்.
32,278 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 573,000 பேர் பயனடையவுள்ளனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாரளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டி.ஜி.எம்.வி. ஹப்புஆரச்சி, இந்திய பிரதி உயர்ஸ்தானிகர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் முகாமையாளர் தீப்தி சுமனசேகர, செயலாற்றுப் பணிப்பாளர் மஹிலால் டி சில்வா, அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.