கஹட்டோவிட்ட ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசலில் இயங்கி வரும் மத்ரஸதுல் இஸ்லாமிய்யா குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் (29) கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
ரவ்ழா, ஸிராத், கவ்ஸர் ஆகிய இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற இப்போட்டிகளின் முடிவில் ரவ்ழா 176 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ஸிராத் 173 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், கவ்ஸர் 156 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.
தகவல் : ஸபிய்யா – கஹட்டோவிட்ட