திருகோணமலை சேருவில ரஜமகா விகாரையில் இன்று (29) விசேட மத அனுஷ்டானம் இடம் பெற்றது. இலங்கையின் நாலாப் புறங்களிலிருந்தும் சிங்கள மக்கள் பெரும்பாலானோர் இதில் பங்கேற்று தங்களது மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர்.
விசேட நிகழ்வினை கலிகமுவ ஜானதீப அவர்கள் வழிநடாத்தினார்.
பல நூற்றுக்கணக்கான பௌத்த மத குருக்களும் பங்கேற்றார்கள்.
இவ் விசேட நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம மற்றும் அவரது மனைவி தீப்தி போகொல்லாகம உட்பட பலர் பங்கேற்றனர்.
(ஹஸ்பர் ஏ ஹலீம்)