ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் "எழுச்சி பெரும் பொலன்னறுவை " அபிவிருத்தி திட்டத்தின்கீழ் புறநெகும கிராமிய அபிவிருக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் 270 மில்லியன் ரூபா நிதியுதவியில் தம்பாளை உட்பட வெவேதென்ன,ரிபாய்ப்புரம், அல்ஹிலால் புரம், சேவாகம,லங்காபுர முதலான கிராம சேவகர்கள் பிரிவுக்குட்பட்ட 2500 குடும்பங்கள் தூய குடிநீரை பெற்றுக்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்படும் நீர் விநியோகத்திற்கான குழாய் பதிக்கும் பூர்வாங்க வேலைகளை அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (21) அல்ஹிலால் புரத்தில் ஆரம்பித்து வைத்தனர்.