A+ A-

புதிய மாகாண விளையாட்டு துறை பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் கடமைகளை பொறுப்பேற்றார்.


கிழக்கு மாகாண விளையாட்டுத் துறை திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக நூர்தீன் முஹம்மட் நௌபீஸ் இன்று திங்கட் கிழமை (15) தனது கடமைகளை திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண விளையாட்டுத் துறை திணைக்கள  அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக  பொறுப்பேற்றார்.

இலங்கை நிருவாக சேவையை சேர்ந்த இவர்  பதவி உயர்வு பெற்று இந்த நியமனத்தை கிழக்கு ஆளுனர் ரோஹித போகொல்லாகம புதன் கிழமை (10) வழங்கினார்.

முன்னால் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர், கிராமிய கைத்தொழில் உற்பத்தி திருகோணமலை  மாவட்ட பணிப்பாளர் , கிண்ணியா நகர சபையின் செயலாளர் போன்ற பதவிகளையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறாவூறை பிறப்பிடமாகக் கொண்ட இவர் நூர்தீன் மற்றும் எம்.டி.அஸீஸா ஆகியோரின் புதல்வருமாவார்.

கடமையை பொறுப்பேற்றதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

கிழக்கு மாகாணத்தை விளையாட்டுத் துறையில் தேசிய மட்டம் தொடக்கம் சர்வதேசம் வரை இட்டுச் செல்ல வேண்டும். விளையாட்டுத் துறைகளை மேம்படுத்துவதுடன் சிறந்ததொரு விளையாட்டு சமூகத்தை உருவாக்க முன்வருவேன் என புதிதாக மாகாண விளையாட்டு பணிப்பாளராக கடமையேற்ற என்.எம். நௌபீஸ் மேலும் தெரிவித்தார்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)