A+ A-

இராஜகிரிய பள்ளிவாசல் ஒழுங்கையிலுள்ள சிறுவர் பூங்காவும், பாதையும் மாநகர சபையினால் அபிவிருத்தி செய்யப்படுதல் வேண்டும் - அலி உஸ்மான் (மா நகர சபை உறுப்பினர்)






ஸ்ரீ ஜயவர்தனபுரக் கோட்டே மாநகர சபையின் அமர்வு சென்ற (09) ஆம் திகதி நடைபெற்றது. இதன் போது உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் அலி உஸ்மான் அவர்கள், 

"மிக நீண்ட காலமாக இராஜகிரிய, குருந்துவத்த பள்ளிவாசல் ஒழுங்கையிலுள்ள சிறுவர் பூங்காவினை புனரமைத்துத் தருமாறு பல தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்த போதிலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை. அதனை சபையின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, மாநகர சபைக்குச் சொந்தமான மண்டபத்தை நவீனமயப்படுத்தி, மூன்று மாடிகளில் வாசிகசாலை, ஜிம் பயிற்சி நிலையம், பல்வேறு  நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான மண்டபம் மற்றும் பாடநெறிகளை நடாத்துவதற்கான இடம்  போன்றவற்றை அமைக்க ஆலோசனை கூறுகிறேன்" என்று தெரிவித்தார்.

மேலும், "இராஜகிரிய, குருந்துவத்த பள்ளியின் பின்னாலுள்ள பள்ளிவாசல் ஒழுங்கையை 5/3 இலிருந்து 5/18 வரை வசிக்கும் மக்களின் கோரிக்கைக்கு அமைய மாநகர சபைக்கு எடுத்துக் கொள்வதுடன், அதில் வடிகாலமைப்பு ஒன்றை அமைப்பதுடன், பாதைக்கு இன்டர்லொக் கற்களைப் பதித்து அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை கூறுகிறேன்"
என்றும் கூறினார்.

(கஹட்டோவிட்ட ரிஹ்மி)