கொழும்பு, கொலன்னாவ அமானா சர்வதேச பாடசாலையின் 15ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு கல்வி மற்றும் ஆக்க கண்காட்சி கடந்த 5,6,7ஆம் திகதிகளில் பாடசாலையின் தலைவர் கே.எம்.ஆர். நிஸாம்தீன் தலைமையில் நடைபெற்றது.
கோள்மண்டலம், பசுமையுடன் ஒன்றித்தல், நாசா ஆய்வுகூடம், புதுமையுலகு, கலப்பின நகரம், விஞ்ஞான கண்டுபிடிப்புகள், வரைபுகளும் ஆக்கங்களும் மற்றும் தமிழ், சிங்கள, ஆங்கில, அரபு மொழி கலாசாரங்கள் போன்ற தலைப்புகளில் மாணவ, மாணவிகளின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.