ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் எண்ணக்கருவில் உருவான "வீட்டுக்கு வீடு மரம் - பசுமைப்புரட்சிக்கான அழைப்பு" செயற்திட்டம் கடந்த இரு வருடங்களாக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதனது ஓர் அங்கமாக இன்றைய தினம் (02) கம்பஹா மாவட்டம், அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள கஹட்டோவிட்ட வட்டாரத்தில் இச்செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனை இளைஞர் காங்கிரஸ் தேசியப் பேரவையின் உறுப்பினரும், ஊடகவியலாளருமான ரிஹ்மி ஹக்கீம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.