சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் முன்பள்ளி பாடசாலையின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று (07) ஞாயிற்றுக்கிழமைசாய்ந்தமருது வொலிவேரியன் பல்தேவை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
எம்.எஸ்.காரியப்பர் முன்பள்ளி பாடசாலையின் ஆசிரியை ஏ.எம்.அஸ்மினா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு எம்.எஸ்.காரியப்பர்வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.ஏ.நாபித், கல்முனை வலய முன்பள்ளி வெளிக்கள உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.அனீஸ், சிறுவர்அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.ஆயிஷா, சாய்ந்தமருது சிங்கர் சோ றூம் உரிமையாளர் எஸ்.எச்.ஜிப்ரி, அறிவிப்பாளர் தொழிலதிபர்ஏ.எல்.ஆப்தீன், மாவட்ட பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.றசீன், கல்முனை மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரீப், எம்.எஸ்.காரியப்பர்வித்தியாலய பிரதி அதிபர் திருமதி சபீனா நஜீம், ஆசிரியைகளான திருமதி எஸ்.எச்.மர்சுக்னா ஆரீப், திருமதி எம்.வி.பாயிசா றசீன், ஆசிரியர்எம்.மாஹிர், முன்பள்ளி ஆசிரியைகளான எம்.எம்.பர்வீன், கே.எம்.பௌமியா உள்ளிட்ட மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் மாணவர்களுக்கான வினோத விளையாட்டுக்களும், பெற்றோருக்கான சங்கீத கதிரை உள்ளிட்ட பல்வேறு வினோதவிளையாட்டுக்களும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இதன்போது விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் என்பன நிகழ்வில் கலந்து கொண்டஅதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
முன்பள்ளி பாடசாலையின் ஆசிரியைகளான ஏ.எம்.அஸ்மினா, எம்.எம்.பர்வீன் மற்றும் கே.எம்.பௌமியா ஆகியோர்களினால் நிகழ்வின் கலந்துகொண்ட அதிதிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
(றியாத் ஏ. மஜீத்)