திருகோணமலை பொது வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் இன்று (04) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம அவர்களின் அழைப்பிற்கமைய திடீர் விஜயமொன்றை சுகாதார மற்றும் சுதேச வைத்தியத் துறை அமைச்சர் டாக்டர் ராஜிதசேனாரட்ண பார்வையிட்டு குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டிடங்கள், வைத்தியசாலையின் ஏனைய தேவைகள் தொடர்பிலான விடயங்களையும் இதன் போது திடீர் விஜயம் மேற்கொண்ட டாக்டர் ராஜித கிழக்கு ஆளுனரிடம் கேட்டறிந்து கொண்டார்.
எதிர்காலத்தில் வைத்தியசாலை குறைபாடுகளை தீர்த்து வைப்பதாகவும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவிடம் சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரட்ண இதன் போது தெரிவித்தார்.
இதில் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் உட்பட பலர் பங்கேற்றனர்.
(ஹஸ்பர் ஏ ஹலீம்)